6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
பணிகள் பாதிப்பால் பொதுமக்கள் அவதி
வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து சென்னையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டாறு, உள்பட ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களின் உள்ள 158 கிராம நிர்வாக அலுவலர்களும் பணிகளை புறக்கணித்து அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

















