தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது தொடர் காத்திருப்பு போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தில் குடிநீர் கழிவறை இணைய வசதி உள்ளிட்ட நவீனமயமாக்கப்பட்ட கட்டிடமாக மாற்ற வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கும் முறையில் பட்டப்படிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும் பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல் பத்தாண்டு பணியாற்றியவர்களுக்கு தேர்வு நிலை எனவும் 20 ஆண்டு பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் சங்க வட்டத் தலைவர் B சுதாகர் தலைமையிலும்
முன்னிலை S இராஜ்குமார்
மாவட்ட பொருளாளர், பார்த்திபன் மாவட்ட அமைப்பு செயலாளர், புருஷோத்தமன் வட்ட செயலாளர்,S . உதயகுமார் வட்ட பொருளாளர் கலந்து கொண்டு போராட்டம் நடைபெற்றது இதில் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி 50 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

















