குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் எனப்படும் சமத்துவ உணவு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி துவங்கி வைத்தார் :-
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமபந்தி போஜனம் எனப்படும் சமத்துவ உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பூங்கொடி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் உமா மகேஸ்வரன் , மற்றும் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் திருமதி கோமதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

















