நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் என்ற கிராமத்தில் NFITU கட்டுமான தொழிற்சங்கம் தலைவர் பிரகாஷ் செயலாளர் மாரிமுத்து இவர்களின் தலைமையில் கட்டுமான தொழிற்சங்க கிளை இன்று உருவாக்கப்பட்டது கட்டுமான அணி மாவட்ட செயலாளர் திரு முருகேசன் மற்றும் பிரியா உழைப்பளர் அணி மாநில செயலாளர் ஒன்றிய செயலாளர் எட்டியப்பன் ராஜேந்திரன் தாமோதரன் அவர்கள் முன்னிலை வகித்தனர் இதில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர் நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கலந்துகொண்டு கிளை அலுவலகத்தை திறந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டன பிறகு பாலா அவர்கள் பேசுகையில் ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 5000க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள் அதில் 2000 கூலி தொழிலாளர்கள் நம் நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் டிரேட் யூனியன் தொழிற்சங்கத்தில் இணைந்திருக்கிறார்கள் வருடம் தோறும் அவர்களுடைய பிள்ளையின் கல்வி உதவித்தொகை ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கல்வி உதவித்தொகை பெற்று வளமோடு வாழ்ந்து வருகிறார்கள் இன்னும் எண்ணற்ற நலிவடைந்த கூலி தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களையும் NFITU தொழிற்சங்கத்தின் மூலம் இணைத்து பல்வேறு சலுகைகளைப் பெற்று வளமோடு வாழ்வதற்கு அனைத்து சேவைகளையும் இந்த தொழிற்சங்கம் செய்து வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் சேந்தமங்கலம் ராஜேந்திரன் வேலாயுதம் பெருமாள் தேவன் அஞ்சலை சத்தியவாணி முத்து மற்றும் NFITU தொழிற்சங்க உதவியாளர் ஐஸ்வர்யா நிஷா மற்றும் பல உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்













