ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் திருமதி. சரண்யா, இணை ஆணையர் திருமதி. மாரி செல்வி, ஆவடி மாநகர மேயர் திரு. ஜி. உதயகுமார், வருவாய் ஆய்வாளர் திரு. மதன், தேர்தல் வட்டாட்சியாளர் திரு. ஜோயல் தாஸ், கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் K.G. பார்த்திபன், துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் சல்மா பானு , நிதி அதிகாரி திரு .அப்துல் காதர், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். கி.சுரேஷ் குமார், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் திரு. ஷாகுல் ஹமீத், பேராசிரியர்கள் மற்றும் 300 மாணவ மாணவியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.
இப் பேரணி ஆவடி மாநகராட்சியிலிருந்து தொடங்கி, நேரு பஜார் வழியாக, ஆவடி ரயில் நிலையம் வழியாகச் சென்று, மீண்டும் ஆவடி மாநகராட்சியில் நிறைவடைந்தது. இப் பயணத்தின் முழுவதும் வாக்காளர் உரிமையின் மேன்மை, ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் ஒவ்வொரு வாக்கின் மதிப்பு மற்றும் இளைஞர்களின் பொறுப்பான பங்கேற்பு ஆகியவை பொதுமக்களிடையே ஆழமாக உணர்த்தப்பட்டன.
நிகழ்வின் நிறைவில் அனைவரும் “என் வாக்கு – என் உரிமை” என்ற உறுதியை ஏற்று, ஜனநாயகக் கடமையை நேர்மையும் விழிப்புணர்வும் உடன் நிறைவேற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
















