அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்து பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்ட திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டல பணிமனைகள் முன்பும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட மண்டல பணிமனை முன்பு சிஐடியு ,ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தை தனியார் மையம் ஆக்கும் சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு,ஏஐடியூசி சார்பில் கிளைத் தலைவர் சோமசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாநிலம் தழுவிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான கோரிக்கையாக மோட்டார் வாகன சட்டம் 288 ஏ பிரிவை திருத்த கூடாது, மின்சாரப் பேருந்துகளை அரசே இயக்க வேண்டும், தனியார் பேருந்துகளை நிரந்தரமாக குத்தகை எடுக்கும் முயற்சி கைவிட வேண்டும் , அரசு போக்குவரத்து பணிமனைகளை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணை பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மோகன், துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பாரதிமோகன், துணைத்தலைவர் திருச்செல்வம், மாநில நிர்வாக குழு நிர்வாகிகள் மணிமாறன், வைத்தியநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் அனிபா, மாவட்ட தலைவர் ஜோதிபாசு, உள்ளிட்ட கோரிக்கைகளை விலக்கி கண்டன உரை நிகழ்த்தினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சிஐடியு, ஏஐடிசி யு நிர்வாகிகள் சி என் எஸ் டி சி நாகை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.














