கிராமத்தில் பாழடைந்த கோவிலில் மண்ணில் புதைந்திருந்த மாணிக்கவாசகர் சிலை ஐம்பொன் சிலையா என ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் கிராமம், மேல தோப்பு தெருவில் பழமை வாய்ந்த அண்ணாமலை ( சிவன்) திருக்கோயில் உள்ளது இக்கோவில் பாழடைந்து பழமையாக உள்ளது இந்நிலையில் அந்த கோவிலை சில நாட்களாக சுத்தம் செய்யும் அணியும் நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று மாலையில் சுத்தம் செய்யும் பணியின் போது 18/01/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.10 மணியளவில் மேற்படி கோயில் வாசலில் உள்ள விநாயகர் சிலை அருகே மண்ணில் புதைந்திருந்த சுமார் 1 அடி நீளம் உள்ள மாணிக்கவாசகர் சிலை கண்டு எடுக்க பட்டுள்ளது, பல ஆண்டுகளாக மண்ணில் புதைந்து இருந்த மாணிக்கவாசகர் சிலை கண்டெடுக்கப்பட்டு பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மூலம் வருவாய்த்துறை ஆய்வு செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகர் சிலை தொடர்பாக இந்து அறநிலையத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளிக்க பட்டுள்ளது. மேற்படி மாணிக்கவாசகர் சிலையை கைப்பற்றி தரங்கம்பாடி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க பட்டது
















