41 பேரை பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயிடம் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆயுதப்படை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் கடந்த மாதம் 29, 30, 31 ஆகிய தேதிதகளில் த.வெ.க நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள்
கரூரில் முகாமிட்டிருந்த சிபிஐ அதிகாரிகள், பொதுமக்கள், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகளிடமும், விஜய் பிரசார வாகன ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சி.பி.ஐ.யின் சம்மனை ஏற்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று நேரில் ஆஜரானார்.
இதனை முன்னிட்டு சி.பி.ஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலையின் ஒரு பகுதி முழுவதும் வாகன போக்குவரத்துக்கும், வாகனங்களை நிறுத்திவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

















