திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது, தனித்தே ஆட்சி அமைப்போம் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் திமுக சார்பில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருப்பதாக கூறினார். தனித்து ஆட்சி அமைப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் ஐ.பெரியசாமி கூறினார்.

















