மகாத்மா காந்தி நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாத்மா காந்தி நூறு நாள் தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் அதற்கு துணை போவதாக அதிமுகவை கண்டித்தும் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி அரசியல் கட்சியினர் தமிழகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக
விழுப்புரம் புதியபேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் காங்கிரஸ் கட்சியினர் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சீனிவாசகுமார் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி திட்டத்தை முகடக்க நினைப்பதை கண்டித்தும் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

















