ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்காமல் உள்ளது தொடர்பாக விஜய் வாய் திறக்காமல் மெளனமாக குரல் கொடுக்காமல் உள்ள இவர் மக்கள் பிரச்சனைகளுக்கு எப்படி குரல் கொடுக்க போகிறார் என் கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திமுக கூட்டணியில் இரண்டை இலக்கங்களில் தொகுதியை திமுகவிடம் கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடையின் அரசியல் விளக்க மற்றும் நிதியளிப்பு கூட்டம் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டதிற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசுலா நாட்டு அதிபர் தங்கியிருந்த வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சிறையில் அடைந்துள்ளது இறையான்மைக்கு எதிரானது இதற்காக மக்கள் போராட்டி வருகின்ற நிலையில் இதனை கண்டித்து கடந்த 5 ஆம் தேதி சென்னையில் போராட்டம் செய்ய முயன்றபோது போலீசார் கைது செய்தபோது காவல் துறை கடுமையான அடக்கு முறையை மேற்கொண்டுள்ளதாகவும் பல ஆண்டுகளாக அமெரிக்க தூதரகம் முன்பாக போராட்டம் செய்யவிடாமல் தடுப்பதாக கூறினார். தமிழகத்தில் ஜவுளி துறை தோல் உற்பத்தி போன்றவைகள் பாதிக்கபட்டுள்ளது டிரம்ப்பின் 500 சதவிகித வரி விதிப்பினால் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதாகவும் வாஷிங் டன் முன்பாக அமெரிக்காவில் போராட்டம் நடத்த அனுமதிக்கிறது ஆனால் தமிழகத்தில் அமெரிக்க தூதரகம் முன்பாக போராட்டம் செய்ய அனுமதிப்பவில்லை எனவே அமெரிக்க தூதரம் முன்பாக போராட்டம் செய்ய இடத்தை ஒதுக்கி அனுமதிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வரி உயர்த்தி விதிப்பினை கண்டித்து ஜனவரி 22 ஆம் தேதி தொழில் கேந்திரங்கள் உள்ள பகுதியில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். பொங்கல் தொகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாகவும் ஆனால் குடும்ப அட்டைதாரர்கள் கை ரேகை வைப்பதில் சிரமம் உள்ளதால் கையெழுத்து போட்டாலே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாக கட்சி தங்களது எதிர்களை பழிவாங்க எல்லா வழிமுறைகளை கடைப்பிடித்து கொண்டிருப்பதாகவும், அமலாக்க துறை வருமான துறை போன்றவைகளை கொண்டு மிரட்டுவதாகவும் தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்து கொண்டு பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
தனிக்கை வாரியத்தையும் ஒரு ஆயுதமாக கொண்டு மத்திய அரசு துவங்கி உள்ளதால் தான் ஜனநாயகம் படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை பராசக்தி படத்திற்கு நீண்ட இழுத்தடிப்பிற்கு பிறகு தந்துள்ளனர், ஜனநாயகம் படத்திற்கு சான்றிதழ் வழங்காமல் உள்ளது கண்டிக்கதக்கதது எந்த ஒரு திரைப்படத்திலும் இதுவரை மேல் முறையீட்டிற்கு சென்றதில்லை இது வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது, பழிவாங்கும் நோக்கத்தோடு மேல் முறையீட்டு சென்றுள்ளதாகவும், அவசரமாக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி தேவையில்லாமல் பத்து நாட்கள் தள்ளி வைத்தது என்பது உள்நோக்கத்தோடு செயல்படுவது என்றும் ஜனநாயகன் சான்றிதழ் வழங்காமல் உள்ளது தொடர்பாக விஜய் வாய் திறக்காமல் மெளனமாக குரல் கொடுக்காமல் உள்ள இவர் மக்கள் பிரச்சனைகளுக்கு எப்படி குரல் கொடுக்க போகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் ஒன்றிய அரசினை எதிர்க்க கூடாது என இருக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.மத்திய அரசு தணிக்கை வாரியத்தை இப்படி பயன்படுத்தினால் தொழிலே பாதிக்கப்படும் என்றும் நிலக்கரி ஊழல் தொடர்பாக பண பரிவர்த்தனை அமித்ஷா செய்ததாக ஆதாரம் உண்மையிலையே இருந்தால் மம்தா பானர்ஜி வெளியிடுங்கள் ஏன் மிரட்ட வேண்டும் எங்களிடம் இருந்தால் நாங்கள் வெளியிடுவோம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயமாக இரண்டை இலக்கங்களில் தொகுதியை திமுகவிடம் கேட்போம் என்றும் இடை நிலை ஆசிரியர்கள் வைத்துள்ள கோரிக்கை நியாமான ஒன்று தமிழக அரசு நிறைவேற்றா நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி துறை அமைச்சரிடம் பேசி உள்ளதாகவும், அதற்கான தீர்வு ஓரிரு நாட்களில் தெரிவிப்பார்கள் என் கூறினார். மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கவேண்டும் என்பது தேர்தல் வாக்குறுதி என்றாலும் காலதாமம் ஏற்பட்டாலும் திமுக அரசு மடிக்கணிணி வழங்கி உள்ளது வரவேற்க தக்கது என்றும் திமுக கூட்டணியில் எந்த கட்சி சேரவேண்டும் என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.













