செம்மங்குடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் இன்று நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை திருவாரூர் மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிராமபகுதிகளில் கிராமமக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்மகாமில் காசநோய், இருதயம், ரத்தம், இசிஜி , எக்கோ உள்ளிட்ட பாதிப்புகளை கண்டறிய நவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது ,மாற்றுத்திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள் , முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு முகாமில் பயன் பெற்றனர்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பணியாளர் நல வாரிய அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.













