விழுப்புரம் வி மருதூரில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் 59 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது

இன்று சதுர்த்தி திதி மூல நட்சத்திரம் சித்தியோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் என்கின்ற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மைக்கினிக்கும், ஈஸ்வரனுக்கும் திருக்கல்யாணம் மங்கல வாத்தியம் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் உபயதாரர் அம்பாள் அம்பிகையின் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு சீர்வரிசையாக தாலி, புடவை, பழங்கள்,உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். திருக்கல்யாணத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர், இந்த திருக்கல்யாணம் முடிந்தவுடன் 2000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பார்களாக மாவட்ட கழக பொருளாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு ,பாரம்பரிய உற்சவ தாரர்கள் லட்சுமணன், மணிமாறன், வேதகிரி, தீன தயாளன், சௌந்தரராஜன் ,சத்யநாராயணன், இளங்கோவன் ,மற்றும் எம் ஆர் கே குமரன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர், மருதூர் முத்துராமலிங்கம், சம்பந்தம் மதிமுக நகர செயலாளர், ஈபி ஆறுமுகம் ராமச்சந்திரன் மோகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்