திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட வாளாவாய்க்கால் இடும்பன் கோவில் அருகே திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே நாகப்பட்டினம் பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் கொரடாச்சேரி அருகே உள்ள வடக்குமாங்குடி பகுதியை சேர்ந்த ராஜாலிங்கம் என்பவரது மகன் மதியழகன் 50 என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த திருவாரூர் நகர போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோல இன்று காலை நீடாமங்கலம் பகுதியில் கல்லூரி மாணவி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் லாரி மோதி இருவர் பலியான சம்பவத்தால் திருவாரூர் மாவட்டமே சோகத்தில் மூழ்கியது.














