ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து, ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய் என புதிய உச்சம் பெற்றிருக்கிறது. இதேபோல், வெள்ளி விலையும், கிலோவுக்கு, இன்று ஒரே நாளில், 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக, ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று சவரனுக்கு மேலும் 880 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, நகை வாங்கும் எண்ணத்தில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 13 ஆயிரம் ரூபாயாகவும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 274 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.















