வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தமிழக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் தமிழக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் பெயர் அமைக்க வேண்டும் என் வலியுறுத்தி திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பு பேரணி நடைபெற்றது பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் நிறுவ வேண்டும் எனவும் தமிழ் ஆட்சி மொழியாக செயலுக்கு வர வேண்டும் என்று பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மூர்த்தி மற்றும் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று முக்கிய கடைவீதி, நகர பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வே.மூர்த்தி, திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.















