முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது :-
முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கிட்டப்பா அங்காடியில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு நகர தலைவர் ராஜகோபால் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் அகோரம், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் ! மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் . மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் டி எம் டி எம் செந்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மோடி கண்ணன் மாநில செயலாளர் ஸ்ரீதர் மாவட்டத் துணைத் தலைவர் தெய்வசிகாமணி முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் முட்டம் செந்தில் திரு ஜக்குபாய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஏழை எளியோருக்கு உடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவை கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

















