மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் விக்னேஷ்.27. வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் நேற்று மதியம் விக்னேஷின் பல்சர் டூவீலருடன், அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஜெயபிரகாஷ்.25. என்பவரின் டூவீலரும் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்தது. மதியம் 3 மணிக்கு வந்து பார்த்தபோது டூவீலர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பெட்ரோல் பங்கில் காணாமல் போன தங்கள் டூவீலர்களில் பெட்ரோல் போட்டுவிட்டு 2 வாலிபர்கள் 2 பெண்களுடன் காரைக்கால் மார்க்கத்தில் வேளாங்கண்ணி ஊருக்கு எப்படி செல்வது என்று விசாரித்து சென்றது தெரியவந்தது. உடனடியாக இருவரும் பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சிலைரை அழைத்துகொண்டு வேளாங்கண்ணிக்கு சென்று தங்களது இருசக்கர வாகனத்தை தேடியுள்ளனர். தொடர்ந்து வேளாங்கண்ணி சர்ச் பார்க்கிங் அருகில் டூவீலர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த இருவரும் இருசக்கர வாகனத்தின அருகிலேயே காத்திருந்தனர். இன்று அதிகாலை வாகனத்தை எடுக்க வந்தவர்களை போலீசார் உதவியுடன் பிடித்தனர். பொறையார் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தியதில் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் வசந்தகுமார்.(27), சிவா.(29). என்பதும், இருவரும் இரண்டு பெண்களுடன் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி சென்றபோது சாலை ஓரம் இருந்த விக்னேஷ் வீட்டு வாசலில் சாவியுடன் நின்ற 2 டூவீலர்களையும் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார் வசந்தகுமார், சிவா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இரண்டு பெண்களையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் இருந்து பாதயாத்திரை சென்றவர்கள் இருசக்கர வாகனத்தை திருடி கண்ணகாணிப்பு கேமரா பதிவில் சிக்கி மாட்டி கொண்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

















