திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாரதனை காண்பிக்கபட்டது.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் இருபத்தி இரண்டாவது ஆலயமான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. காவிரிக் கரையோரம் பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கம், சாரங்கம் அப்பாதுரங்கம், ஆகிய அரங்க கோயில்களில் ஐந்தாவது அரங்கமான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 30ஆம் தேதி நடைபெறுகிறது, இதனை முன்னிட்டு 5ம் நாளை முன்னிட்டு பெருமாள், அலங்காரத்தில் உள் பிரகார வீதி உலாவில் எழுந்தருளினார். தொடர்ந்து திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. அதனையடுத்து படி ஏற்ற சேவை நடைபெற்றது. ஆலயத்தில் ஒவ்வொரு படிக்கும் 4 தமிழ் பாசுரங்களை பாடினர். ஒவ்வொரு படியாக பெருமாளை பல்லக்கில் தாலாட்டுவது போல் தாலாட்டி ஐந்து படிகள் கடந்து கர்ப்பகிரகத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து தீபாரதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















