புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, விழுப்புரம் அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்றது. தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதன. இந்த நிகழ்ச்சியில் நகரக் கழக செயலாளர் வண்டி மேடு ராமதாஸ், கோலியனூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் பாபு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ராதிகா செந்தில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி காயத்ரி, நகர தகவல் தொழில்நுட்ப அணி விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழுக்கு மரியாதை செலுத்தினர்.

















