திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்திரா மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் கிறிஸ்துமஸ் விழா இந்திரா கல்லூரி நிர்வாக இயக்குனர் இந்திரா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திரா கல்வி குழும தலைவரும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜி.இராஜேந்திரன், கலந்து கொண்டு திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கிறிஸ்துவ தேவாலய மத போதகர்கள், ஆயர்கள், பங்குத்தந்தைகள், பாஸ்டர்கள், என அனைவருடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் மத போதகர்கள், பாஸ்டர்கள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்.வசந்தா மணி, மருத்துவமனை இயக்குனர் சாந்தி மலர் மற்றும் கிறிஸ்துவ தேவாலய மத போதகர்கள், ஆயர்கள், பங்குத்தந்தைகள், பாஸ்டர்கள், மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

















