திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 25 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களும், 24 பயனாளிகளுக்கு கிறிஸ்துவ நல வாரிய அட்டை என மொத்தம் 49 பயணாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 825 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், நகர்மன்றத்தலைவர்கள் புவனப்பிரியா செந்தில்,பாத்திமா பஷிரா தாஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

















