தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக அதிருப்தியாளர்கள், விஜய்யின் காரை த வழிமறிந்து முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு வழங்காமல், சாமுவேல் என்பவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பணம் பெற்றுக் கொண்டு, கட்சி பொறுப்பை வழங்கியிருப்பதாக, அஜிதா ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, கட்சித் தலைவர் விஜய்யிடம் முறையிடுவதற்காக அவர்கள் சென்னை வந்தனர். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் காந்திருந்த அவர்கள், விஜய்யின் கார் வந்ததைப் பார்த்தவுடன், அஜிதா உள்ளிட்டோர் காரை வழிமறித்தனர். ஆனால் விஜய்யின் கார் நிற்காமல், அவர்களைத் தள்ளிவிட்டுச் சென்றது. அங்கிருந்த விஜய்யின் பாதுகாவலர்கள், அதிருப்தியாளர்களை அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

















