மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, சாலை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனமான முறையில், சங்கத்தின் மாவட்ட தலைவர் கே முருகையன் தலைமையில் நடைபெற்ற, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கையில் ஒப்பாரி வைத்து, மார்பில் அடித்துக்கொண்டு அழுவது போல் கோரிக்கைகளை முழக்கமிட்டபடி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

















