நான் செய்வதைதான் சொல்வேன்..நான் சொல்வதுதான் என் செயல்பாடாக இருக்கும்..”
வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு..
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடம் திறப்பு விழா.. தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி, கூட்டுறவு சங்க வளாகத்தில் திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆர். காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது விநியோக அங்காடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்.. "எனது தொகுதியான நன்னிலம் தொகுதிக்கு சேவை ஆற்றவே நான் இரண்டாம் பிறவி எடுத்துள்ளேன்..நான் செய்வதைதான் சொல்வேன்..நான் சொல்வதுதான் என் செயல்பாடாக இருக்கும்.. நன்னிலம் தொகுதிக்கு பணியாற்றுவதை என் தலையாய கடமையாக நினைக்கிறேன்.."என பேசினார்.
இந்த நிகழ்வில்... வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்.. மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர்,வலங்கைமான் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரமணி, முரளி மற்றும் பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ராமலட்சுமி,
ஒன்றிய துணைச் செயலாளர் ரஷ்யா இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி ஹாஜா மைதீன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் செல்வம், செயலாளர் காமராஜ், அவைத் தலைவர் செல்வராஜ் மற்றும் நார்த்தாங்குடி, பாப்பாக்குடி ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பயனாளிகள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
















