Mayiladuthurai
மயிலாடுதுறை நகரில் நான்கு கோடியே 39 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், மயிலாடுதுறையில் பூமி பூஜை நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது நூலக இயக்ககம் சார்பில் மாவட்ட மைய நூலகம் 4 கோடியே 39 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜையை செய்து வைத்தனர். தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களுடன் கூடிய 14,500 சதுர அடி பரப்பளவில் ஆன மைய நூலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும், இதன் மூலம் மயிலாடுதுறையைச் சார்ந்த மாணவ மாணவிகள் பெருமளவு பயன்பெறுவர் என்றும் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
















