மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவிலில் பகல்பத்து இரண்டாம் நாள் உற்சவத்தில் கிருஷ்ணா அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தாா்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முதல் பகுதியான பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளில் கிருஷ்ணா அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆழ்வார்களுக்கு பெருமாளின் சார்பில் தீச்சுதர்கள் மரியாதை செய்தனர் சாயக் கொண்டை அணிந்து கிருஷ்ணராக புறப்பட்ட ராஜகோபால சுவாமி கோவிலின் பல்வேறு பிரகாரங்கள் வழியாக வலம் வந்து முற்ற வெளியில் எழுந்தருளினார். அப்போது ஒவ்வொரு ஆழ்வாராக பெருமாளின் முன்பு கொண்டுவரப்பட்டனர். தீட்சிதர்கள் மாலை அணிவித்தும், சடாரி சாதித்தும் ஆழ்வார்களுக்கு பெருமாளின் சார்பில் மரியாதை செய்தனர். ஆழ்வார்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கே உரிய தனித்தனி இசையும், தனித்தனி நடையும் பின்பற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

















