தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டோம் முதல்வர் ஐயா எதுக்கு மௌனம் காக்கிறார் என்று தெரியவில்லை! கோரிக்கையை நிறைவேற்றுங்க! செவிலியர்கள் 4வது நாளாக கருப்பு பட்டைய அணிந்து காத்திருப்பு போராட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நான்காவது நாளாக சட்டையில் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது செவிலியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது செவிலியரின் முக்கிய கோரிக்கைகளாக MRB செவிலியர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு எழுதி பணியமர்த்தப்பட்டும் 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனவும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் .
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் அதை வழங்க முடியாது என்று கூறி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளதை கண்டித்தும் மகப்பேறு விடுப்புக்கு அதன் ஊதியத்தை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி தேர்தல் வாக்குறுதியில் 356ஐ நிறைவேற்றுவேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார் ஆனால் தற்போது மௌனம் காப்பது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் செவிலியர்கள் கேட்டுக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
















