திருவள்ளூர் மாவட்டம் தங்கனூர் பகுதியில் வரும் பொங்கல் 14 மற்றும் 15 தேதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த. தங்கள் பகுதி மக்கள் கலந்து ஆலோசித்து தீர்மானித்துள்ளதாகவும் மேலும் ஏற்கனவே தங்கள் பகுதியில் சேவல் சண்டை அரசு விதிமுறைகளின் படி சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் நடைபெற்ற வருவதாகவும் இதே போல் தங்கள் பகுதியில் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குமாறு இதனால் நம் மாவட்டத்திற்கு கூடுதலாகா நற்பெயர் கூடும் எனவும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதி வழங்க வேண்டுமென தங்கனூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர் ஏற்கனவே மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடந்திருந்தால் அதற்கான சாத்திய கூறுகள் இருக்கும் பட்சத்தில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

















