தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை ரேடியல் சாலையில் உள்ள சவுக்கு சங்கரின் இல்லத்திற்கு சென்ற போலீசார், படத் தயாரிப்பாளர் புருசோத்தமன் என்பவரிடம், பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் கொடுத்த புகாரில் கைது செய்ய வந்திருப்பதாக கூறினர்.
ஆனால், சவுக்கு சங்கர் வீட்டின் கதவை திறக்காமல், தன்னுடைய வழக்கறிஞர் வந்த பிறகு, வெளியே வருவதாக கூறி, வீட்டின் உள்ளேயே 4 மணிநேரம் இருந்தார்.
இதையடுத்து, கதவை உடைத்து உள்ள சென்று கைது செய்ய முடிவு செய்த போலீஸார், தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர். அவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், சவுக்கு சங்கரை ஒன்றரைய மணியளவில் கைது செய்தனர்.
காலை முதலே இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வந்தது. தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதன் மூலம், பரபரப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.

















