September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்

by sowmiarajan
December 12, 2025
in News
A A
0
கோவை கீரணத்தம் குளத்தில் 3 காட்டு யானைகள் உற்சாக குளியல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள், கோவை கீரணத்தம் அருகே உள்ள ஒரு குளத்தில் உற்சாகமாகக் குளித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும், அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து நேற்று காலை மூன்று காட்டு யானைகள் வெளியேறின. அவை பெரியநாயக்கன்பாளையம், இடிகரை வழியாக நகர்ந்து, கவுசிகா நதி நீர் வழித்தடங்கள் வழியாகப் பயணித்து, கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதிக்கு வந்தடைந்தன.

கீரணத்தம் வந்த யானைகள், அங்குள்ள ஒரு தனியார் ஐ.டி. பார்க் அருகே உள்ள குளத்தில் நீண்ட நேரம் உற்சாகமாகக் குளியல் போட்டன.

தொழில்துறை நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் யானைகள் நுழைந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் முதலில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களை யானைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது குளிர்காலம் நிலவி, குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், குளத்தில் உற்சாகமாகக் குளித்த யானைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் சிலர், அச்சமின்றி அதனை ரசித்தனர். யானைகள் நடமாடிய கீரணத்தம் பகுதி, அதிகாலை மற்றும் காலை வேளைகளில், தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகம் பயணிக்கும் பகுதியாகும்.

அவர்கள் பணியிடங்களுக்குச் செல்லும் நேரத்தில் இந்த யானைகள் நடமாடியதால், ஏராளமான பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்றவர்கள் பயம் அறியாமல் தங்கள் செல்போன்களில் யானைகளைப் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியுடன் மூன்று யானைகள் இதே பகுதிக்கு வந்ததாகவும், அந்தக் குட்டி யானை வளர்ந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த மூன்று யானைகளும் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மூன்று காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags: coimbatoreKeeranatham pondnatureWild elephantswildlife sighting
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

Next Post

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

மார்கழியை முன்னிட்டு சாத்தூரில் வண்ணக் கோலப்பொடி தயாரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.