திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் ஓ எச் டி ஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் எஸ்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தேர்தல் வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் செய்திடவும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், பணி நிரந்தரம் செய்திடக் கோரியும், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தர செய்திட கோரியும், தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா உதவித்தொகை 15000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊராட்சி ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள், ஓ எச் டி ஆபரேட்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் மாலதி, மாவட்ட செயலாளர் உள்ளாட்சி முரளி, சிஐடியு நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி கண்டன கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
















