10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்க கல்வி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் அமைப்பு சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக எழும்பூரில் கூடிய ஏராளமான ஆசிரியர்கள் அங்கிருந்து பேரணியாக டிபிஐ வளாகத்திற்கு செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்திய போலீசார் ஆசிரியர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
















