திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சேவை சங்கம் சார்பாக சக மாற்றுத்திறனாளிகளுக்கு டீ பிஸ்கட் கொடுத்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளி பொறுப்பாளர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் உள்ளிட்டூர் கலந்து கொண்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சேவை சங்கம் சார்பாக மாவட்டம் முழுவதும் விருந்து கலந்து கொண்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தும் தன்னுடைய சொந்த செலவில் சக மாற்றுத்திறனாளிகளுக்கு டீ பிஸ்கட் கொடுத்து மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வில் மாநில தலைவர் ஸ்ரீகாந்த் துணை தலைவர் தென்னரசன் செயலாளர் வினோத் பிரபு துணை செயலாளர் வினோத்குமார் பொருளாளர் முகுந்தன் ஆலோசகர்கள் ஆனந்தன் குபேந்திரன் கௌரவ தலைவர்கள் திருப்பதி ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.
















