அண்ணல் அம்பேத்காரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுப்புபட்டு வருகிறது இதனை முன்னிட்டு ஆங்காங்கே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலபெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து ஏராளமான அமைப்பினர் மற்றும் கட்சியினர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



















