புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்பரப்பு வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை தூண்டும் வரை பாகிஸ்தானுடன் சுமூகமான உறவு கிடையாது என இந்தியா அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு விமானங்களும் இந்திய வான்பரப்பில் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், டிட்வா புயலால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு, பல்வேறு உலக நாடுகள் உதவிப் பொருட்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்பும் வகையில், இந்தியா வழியாக செல்ல பாகிஸ்தான் விமானங்களை அனுமதிக்குமாறு, பாகிஸ்தான் வேண்டுகோள் வைத்தது. இதையடுத்து, நிவாரண பொருட்கள் எடுத்து செல்லும் பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.















