சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எஸ்.கே.ஆர். நகரை சேர்ந்தவர் பழனிவேல்.61. பைனான்சியர். இவர் சீர்காழி- வைதீஸ்வரன் கோவில் இடையே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேளாங்கண்ணியில் இருந்து எழும்பூர் நோக்கிச் சென்ற சிறப்பு விரைவு ரயில் மோதியதில் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் விரைந்து வந்து இறந்த பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்














