மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையூர், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி , பருத்திகுடி, கங்காதரபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் எம் எல் ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிகாரிகளுக்கு பருவமழை காலங்களில் துரிதமாக பணி செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
மேலும், கோனேரிராஜபுரம் ஊராட்சி கீழமூலையைச் சேர்ந்த தனபால் உஷா, நக்கம்பாடி ஊராட்சி துரைசாமி பாப்பாத்தி மற்றும் கங்காதரபுரம் ஊராட்சி நிமிலி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் இவர்களது வீடு டித்வா புயல் மழையினால் சேதமடைந்தது தகவலை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். அப்போது குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


















