1.மழையால் தமிழகத்தில் இதுவரை பெரிய அளவுக்கு பாதிப்பில்லை – அனைத்து இடங்களிலும் மீட்பு குழு தயாராக இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
2.டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது பலத்த
மழை – குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் அவதி
3.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் சீற்றம் – பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை, புயல் மழையால் மீன்பிடித் தொழிலும் பாதிப்பு
4.கனமழையால் ராமேஸ்வரம் அருகே மீனவர் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம்
5.டிட்வா புயல் எச்சரிக்கை எதிரொலியாக சென்னையில் இருந்து புறப்படும்
54 விமானங்கள் ரத்து – மதுரையில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து
6.சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் – குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை
7.ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ஆயிரத்து 120 ரூபாய் அதிகரிப்பு –
ஒரு சவரன் 96 ஆயிரம் ரூபாயை நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
8.புதுச்சேரியில் மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து, நகை
மற்றும் பணம் அபகரிப்பு – 2 பெண்களை கைது செய்தது காவல்துறை
9செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றாலும்
அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது – தமிழிசை சௌந்திரராஜன் கருத்து
10.இலங்கையில் டிட்வா புயல் காரணமாக, பல்வேறு இடங்களில்
கனமழை – வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரம்
















