ஹாங்காங் நகரின் அடுக்குமாடி குடியிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸில் உள்ள டாய் போ பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
32 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் புதுப்பித்தல் பணிக்காக அதன் வெளிப்புறத்தில் மூங்கில் சாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த சாரத்தில் ஏற்பட்ட தீ பலத்த காற்று காரணமாக அசுர வேகத்தில் அங்கிருந்து ஏழு கட்டிடங்களுக்கு பரவியுள்ளது. 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 60 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 94 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோரை காணவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த 30 ஆண்டுகளில் ஹாங்காங் நகரம் கண்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.

















