அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர்.
வெள்ளை மாளிகை வடமேற்கு பகுதியில் நேற்றிரவு திடீரென நுழைந்த ஒரு மர்ம நபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டுள்ளார். இதில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக மற்ற பாதுகாவலர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இதில் அந்த நபரும் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் என்பது தெரியவந்தது.
















