மறைமலைநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கோயில்கள் மற்றும் மருத்துவமனைகள் , , தொழிற்சாலைப்பகுதியிலும் அமைத்து அரசு விதிகளுக்கு மாறாக நான்கு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தக் டாஸ்மாக் கடையினால் தொழிற்சாலைகள் கோவில்கள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி என்பதால் பொதுமக்கள் மிகச் சிரமத்திற்கு ஆளாகின்றன என கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினார் இன்று மறைமலைநகர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கோஷங்கள் எழுதப்பட்டன.

















