- ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், எக்ஸ் சமூக வலைதள கணக்குகளின் இருப்பிடம் குறித்து பயனர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
- உலக நாடுகளில் ஏற்படும் பிரச்னைகளின் போது மனித குலத்தை காக்கும் வகையில் இந்தியா செயல்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
- ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த, விமானியின் குடும்பத்தினருக்கு முப்படையினரும் ஆதரவாக இருப்பர்’ என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
- நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் மோடி மேற்கொண்ட பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
- சமஸ்கிருதம் குறித்து விமர்சித்துள்ள உதயநிதி, ராகுல் கொடுத்துள்ள இத்தாலி கண்ணாடியை மாற்றிவிட்டு, இந்திய கண்ணாடியை போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் எல்லாம் சரியாக தெரியும் என்று பாஜ தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் கூறி உள்ளார்.
- அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- சேதமடைந்த பள்ளி கட்டடத்தில், நமது குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- வத்தலகுண்டு அருகே, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் பின்னலாடை நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மகள் வீட்டிலும் சோதனை நடந்தது.
- ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் சீன கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
- இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ், 25, தேர்வு செய்யப்பட்டார்.















