விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் .
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 18ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் பணிகளை முறைபடுத்துதல், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீண்டும் வழங்குதல், புற ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்தல், நிலஅளவர் பணியிடங்களை நிரப்புதல், ஊதிய முரண்பாடுகளை நீக்குதல், மேலும் வட்டம், குறுவட்டம், நகர சார் ஆய்வாளர்கள் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி.
இக்கோரிக்கைகளை முன்வைத்து வரும் அவர்கள், இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்லுவோம் என தெரிவித்துள்ளனர்.

















