- நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்ட திமுக செயலாளர் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அது பிழை செய்ய வாய்ப்பு உள்ளது என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
- கிளவுட்பிளேரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக எக்ஸ் சமூக வலைதளம்,சாட் சிஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை முடங்கின.
- நவ.20ம் தேதி பீஹாரின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கின்றனர்.
- பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக்கூடாது. அதனை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
- பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து மோடி வெற்றி பெற்று விட்டார். தமிழகத்திலும் அதுபோன்று ரூ.15 ஆயிரம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- நாட்டையே உலுக்கிய டில்லி கார்குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இப்போது மும்பை வரை நீண்டுள்ளது. சந்தேக நபர்கள் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- டில்லியில் உள்ள நீதிமன்றங்களுக்கும் இரண்டு சிஆர்பிஎப் பள்ளிகளுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


















