ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு, பத்து அணிகளும் தக்கவைக்கப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் டிரேடிங் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் முக்கியமாக பேசப்பட்ட பெயர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை போட்டியிட்ட அர்ஜுன், இந்த முறை டிரேட் ஒப்பந்தம் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்க்கு மாற்றப்பட்டுள்ளார்.
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுனை, 2021ல் ரூ. 20 லட்சத்திற்கு மும்பை அணி முதன்முதலாக தேர்வு செய்தது. 2022 மெகா ஏலத்தில் ரூ. 30 லட்சத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் மூலம் அவர் இதுவரை மொத்தம் ரூ. 1 கோடி 40 லட்சம் வருமானம் பெற்றிருக்கிறார். 2023 சீசனில் அர்ஜுனுக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி, 13 ரன்கள் சேர்த்தார்.
சம்பளத்தில் மாற்றமில்லை
அணி மாற்றம் ஏற்பட்டாலும், அர்ஜுனின் ஒப்பந்த தொகை மாறவில்லை. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 2026 சீசனுக்காகவும் அவரை ரூ. 30 லட்சத்திற்கு தொடர்ந்தும் வைத்திருக்கிறது.
இதனால், IPL 2026-இல் புதிய ஜெர்சியில் களமிறங்க அர்ஜுன் டெண்டுல்கர் தயாராகி வருகிறார்.

















