திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், குடவாசல் பேரூர் பகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்..திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்.. கழக அமைப்புச் செயலாளரும்.. தமிழக முன்னாள் உணவு துறை அமைச்சரும்.. நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குடவாசல் தெற்கு ஒன்றிய பகுதிகளான சிமிழி, பெரும் பண்ணையூர், கண்டிரமாணிக்கம், பிலாவடி உள்ளிட்ட பகுதிகள்..மற்றும் குடவாசல் பேரூர் பகுதிகள்… குடவாசல் வடக்கு ஒன்றிய பகுதிகளான வயலூர், பரவாக்கரை, விளாகம், செறுகுடி உள்ளிட்ட .. 105 வாக்குச் சாவடிகளின்..BLA2 முகவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு SIR விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது குறித்தான சந்தேகங்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்தார்.. மேலும், விண்ணப்ப படிவம் வழங்குவது… சேர்த்தல்.. நீக்கல்.. குறித்தான விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில்.. குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா சுப்பிரமணியன், குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் செறுகுடி ராஜேந்திரன், வாக்கு சாவடி பொறுப்பாளர் ரயில் பாஸ்கர், முன்னால் குடவாசல் பேரூராட்சி தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் எம்.ஆர். தென்கோவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்



















