நடிகரும் தவெக தலைவருமான விஜயிடம் மன்னிப்பு கோரி, “என்ன இருந்தாலும் அப்படி பேசியிருக்கக் கூடாது” என நடிகை மற்றும் தமிழக முன்னேற்றப் படை கட்சித் தலைவர் வீரலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது :
“விஜய் அண்ணா, உங்களை அரசியல் ரீதியாக விமர்சிப்பதில் தவறு இல்லை. ஆனால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது தவறு. அந்த உரிமையில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“ஒரு 17 வயது சிறுமி விஜய்யின் தீவிர ரசிகை தீக்காயங்களால் அவதிப்பட்டு, விஜய்யிடம் உதவி கேட்டிருந்தார். ஆனால் தக்க நேரத்தில் உதவி கிடைக்காமல் என் கண் முன்னே அவர் உயிரிழந்தார். அந்த வேதனையிலும் ஆத்திரத்திலும் தான் நான் சில கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்,” என வீரலட்சுமி விளக்கம் அளித்தார்.
அத்துடன், தற்போது மேலும் ஒரு ரசிகர் குடும்பம் சந்திக்கும் சிக்கலை குறித்து விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
“சென்னை ரிப்பன் பில்டிங் அருகே வசிக்கும் ஒரு தாய்–மகன் இருவரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள். அந்த குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். மகன் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் பாடுபடுகிறார். அந்த குடும்பத்திற்கும் உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நிகழ்வை நினைவுகூர்வதற்காக கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த நிகழ்வுக்குப் பிறகு வீரலட்சுமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பின்னர் தற்போது தனது வீடியோவில் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார்.

















