2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பொழுது ஓய்வூதியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 70 வயது நிறைந்த அனைத்து ஓய்வு ஊதியர்களுக்கும் பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் மா நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வட்ட செயலாளர் ராயர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வழிநடத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்



















