தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை என்று, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.TTV தினகரனை கூட்டணியில் சேர்க்க அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் முயற்சித்து வரும் வேலையில், திட்டவட்டமாக இந்த கருத்தை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக-வைத் தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் வெற்றிபெற முடியாது என்று குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், தனக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தினகரன் கூறினார். நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை அறிந்து, அவருடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணத்தில் TTV இருக்கிறார் என அரசியல் விமசகர்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் NDA கூட்டணியை TTV முற்றிலுமாக உதறியுள்ளார்.


















